Monday, April 26, 2010

கொலாஜ் ஓவியம் உருவாக்கத்தில்... நாங்கள்

கொலாஜ் ஓவியம் - ஓவியர் இராஜராஜன்


கொலாஜ் ஓவியம் முழுமை பெற்றது


கொலாஜ் ஓவிய திறப்பு விழாவில் திரு பிரபாகரன் 


இராஜராஜன் மற்றும் மாணவர்களுக்கு திரு.கோ.சுகுமாரன் பாராட்டு 


கொலாஜ் ஓவியம் உருவாக்கிய மாணவர்களுடன் ஓவியர் இராஜராஜன்


கொலாஜ் ஓவியத்தை பார்வையிட வந்தவர்களுடன் ஓவியர் இராஜராஜன்


கொலாஜ் ஓவியத்தை திறந்து வைத்த பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் முனைவர் சிற்பி செயராமன், உறுப்பினர் செயலர் திரு மாணிக்கசாமி,  மற்றும் அலுவலக ஊழியர்கள்

உலகின் மிகப்பெரிய காகித 'கொலாஜ் ஓவியம் 'லாஸ்ட் சப்பர்

உலகின் மிகப்பெரிய காகித 'கொலாஜ் ஓவியம் 'லாஸ்ட் சப்பர்

புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன் மற்றும் அவரது மாணவர்கள் சரவணன், பாலாஜி, முருகன், மஞ்ச்குமார், செல்வி.சத்யா, பிரபாகரன், ரமணி வெங்கட்ராமன், ஆகியோர் கடந்த14.8.2008 அன்று பல்கலைக் கூட நுண்கலைத் துறை இரண்டாம் வருட ஓவியப் பட்ட படிப்பு வகுப்பறையில் 23 அடி நீளமும் 7.3 அடி உயரமும் உள்ள சுவரில் காகிதங்களை ஒட்டி உலகின் புகழ் பெற்ற ஓவியரான லியானர்டோ டாவின்சி தீட்டிய தி லாஸ்ட் சப்பர் ஓவியத்தை காகித ஓவியமாக தீட்டினார்கள், ஓவிய பாடத்திட்டதில் கொலஜ் ஓவிய முறை உள்ளது, பொதுவாக மாணவர்கள் இந்த கொலாஜ் மீது அதிக விருப்பம் கொள்வதில்லை, மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த ஓவியம் உருவாக்கப் பட்டுள்ளது. உலகின் பல பாகங்களிலும் இத்தகைய கொலாஜ் ஓவியங்கள் தீட்டப்படுகின்றன, வண்ணங்களையோ, தூரிகைகளையோ பயன் படுத்தாது காகிதங்களை மட்டுமே வெட்டி ஒட்டி உருவாக்கப்படும் கொலாஜ் ஓவியங்கள் மிக அரிதான கலை வடிவமாகும்.

இந்த ஓவியத்தை உருவாக்க திட்டமிட்ட போது மிக கடினமான காட்சியை கொண்டு உருவாக்க வேண்டு மென்று தீர்மானித்தோம்.அதன் படி உலகிலேயே முதன் முதலாக உளவியல் ரீதியில் அமைக்கப்பட்ட ஓவியமான ஏசு பிரானின் இறுதி போஜனம் என்னும் புகழ் பெற்ற ஓவியத்தை பயன் படுத்தினோம்.மிக சிறிய அசல் ஒவியத்தின் புகைப்படத்தினை பென்சில் மூலம் கட்டங்களை பகுத்து அதனைக்கொண்டு பெரிது படுத்திசுவரில் காக்கி காகிதங்களை ஒட்டி அதன்பின் வெள்ளை காகிதத்தை சுருக்கமின்றி பசை தடவி ஒட்டி நன்கு காய்ந்த பின் பென்சில் மூலம் கவனமாக உருவங்களை ஒளி நிழல் கூடியதாக வரைந்து கொண்டு ஆங்கில புத்தகங்களில் உள்ள பொருத்தமான வண்ணப்பகுதிகளை கத்தரிக்கோல்,பிளேடு மூலம் வெட்டி மிக கவனமாக ஒட்டி இந்த ஓவியம் உருவாக்கப் பட்டது.

வழக்கமான வகுப்பு நேரம் போக இதர நேரங்களிலும் இதனை உருவாக்கினோம். முடியும் வரை வெளியே தகவல் தெரிய வேண்டாமென பணியை தொடர்ந்தோம்.ஆரம்பித்த ஆறு மாதங்களில் எங்கள் கல்லூரிக்கு வந்திருந்த தமிழ் நாளிதழ் புகைப்படக்காரர் தற்செயலாக ஓவியம் உருவாக்கப்படுவதை பார்த்து விட்டார்.அவர் மூலமாக புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் தங்கள் ஊடகங்கள் மூலம் செய்திகளை வெளியிட்டனர். பதினோரு மாதங்களில் ஓவியம் முடிவடைந்தது.

இதற்கு ஆன செலவுகள் யாவும் எங்களுடைய பொருப்பிற்குள் இருப்பதாக அமைத்துக்கொண்டோம்.எங்கள் கல்லூரிக்கு எந்த சிரமமோ செலவோ வைக்காமல் இந்த அரிய ஓவியத்தை உருவாக்கினோம்.ஓவியம் முடிந்த பிறகு அதற்கான மிகப்பெரிய பிரேம் தேவைபட்டது,ஒரே நாளில் அந்த ஓவியத்துக்கான பிரேம் மற்றும் திரைசீலை ஆகியவற்றை தனது சொந்த செலவில் புதுச்சேரி அரியாங்குப்பம் புன்னகை புத்தக மையத்தின் உரிமையாளர் திரு.வீரமோகன் அவர்கள் அமைத்துத்தந்தார் என்பதில் மகிழ்ச்சி.

ஒரே வருடத்தில் வழக்கமான ஓவிய பயிற்ச்சியினூடே இத்தகைய சாதனை அனுபவத்தையும் எனது மாணவர்கள் பெற்றார்கள். 2009 ஆம் ஆண்டு ஜூன் 5 ம் நாள் பி.வி.ஏ, ஓவிய பட்டப்படிப்பு இரண்டாமாண்டு வகுப்பறையிலேயே இந்த ஒரே ஓவியத்தை கொண்டு கண்காட்சி நடத்தினோம். பல்கலைகூட உறுப்பினர் செயலர் திரு.மாணிக்கசாமி ஓவியத்தை திறந்து வைத்தார். சென்னை கவின் கலைக் கல்லூரியின் அப்போதைய முதல்வர் திரு.மனோகரன்,எமது பல்கலைக்கூடத்தின் முதல்வர்,டாக்டர் திரு.சிற்பி
ஜெயராமன், புதுச்சேரி ஆனந்தா இன் ஹோட்டல் இயக்குனர் திருமதி சரோஜா திருநாவுக்கரசு, புதுச்சேரி ஓவியர் மன்ற நிறுவனர் திரு.இபேர், மற்றும் உள்ளூர் ஓவியர்களும் எமது பல்கலைக்கூடத்து முன்னாள் மாணவர்களும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தோழர் புதுவை சுகுமாரன், மாணவர் கூட்டமைப்பின் தோழர் சதீஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகின் மிகப்பெரிய காகித கொலாஜ் என்பது மட்டுமல்லாது,ஒரே ஒரு ஓவியத்தைக் கொண்டு கண்காட்சி நடத்திய பெருமையும் இந்த ஓவியத்துக்கு உண்டு.தற்போது இந்த ஓவியம் தென்னிந்தியாவில் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக் கூடம் என்ற நுண்கலைக் கல்லூரியின் ஓவியத் துறையின் இரண்டாமாண்டு பட்டப் படிப்பு வகுப்பில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.
தற்போது இந்த கொலாஜ் ஓவியத்தை   அசிஸ்ட் உலக சாதனை அமைப்பு,  ஓர் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.